அர்ஜெண்டினாவுக்குப் பின்னடைவு: கோல்காப்பாளர் ரொமேரோ காயம்

அர்ஜெண்டினாவுக்குப் பின்னடைவு: கோல்காப்பாளர் ரொமேரோ காயம்

1 mins read
cdfabc4b-cc46-42ea-a543-e29c5ad644bc
-

பியூனோஸ் ஐரிஸ்: அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்காக தயார் செய்து வரும் அர்ஜெண்டினாவுக்குப் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. அதன் கோல்காப்பாளரான செர்ஜியோ ரொமேரோவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் அவரால் களமிறங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா தலைநகர் பியூனோஸ் ஐரிஸில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ரொமேரோவின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ரொமேரோ இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் விளையாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. "உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் 23 பேரைக் கொண்ட எங்களது ஆட்டக்காரர்கள் பட்டியலிலிருந்து ரொமேரோவின் பெயர் நீக்கப் படுகிறது," என்று அர்ஜெண்டினா காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த செர்ஜியோ ரொமேரோ. படம்: ஏஎஃப்பி