ஆர்சனலின் நிர்வாகி எமரி

ஆர்சனலின் நிர்வாகி எமரி

1 mins read
bccfcfbd-cdb8-4f14-8858-9537171a69b6
-

ஆர்சனலின் புதிய நிர்வாகியாக ஸ்பானியரான உனை எமரி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஆர்சனல் நேற்று செய்தது. கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனலின் நிர்வாகியாக இருந்த ஆர்சன் வெங்கர் இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி முடிந்ததும் பதவி விலகி னார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எமரி பரெஞ்சுக் குழுவான பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனின் நிர்வாகியாக இருந்து வந்தார். அண்மையில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் வென்ற மூன்று பட்டங்களுக்கு 46 வயது எமரி வகுத்த வியூகங்களே முக்கிய காரணம் எனப் பேசப்படுகிறது. ஆர்சனலின் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்பதில் எமரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அக்குழுவின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார். "உலகிலேயே மிகச் சிறந்த குழுக்களில் ஒன்றான ஆர்சனலில் இணைவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்சனலின் விளையாட்டை ரசித்து உலகெங்கும் அதற்கு பல ரசிகர்கள் உள்ளனர்," என்றார் எமரி.