கிண்ணத்தை நெருங்கியுள்ள சென்னை

கிண்ணத்தை நெருங்கியுள்ள சென்னை

1 mins read
c4d5ca2f-7d88-4b43-8e71-5f33aaf9669f
-

மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும் அணியைத் தீர்மானிக்கும் முதல் தகுதி ஆட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடை பெற்றது. இதில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை களம் இறங்கியது. சென்னை அணித் தலைவர் டோனி பூவா தலையாவில் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் ‌ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி னார்கள்.

முதல் ஓவரிலேயே தவான் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து, வில்லியம்சன் களம் இறங்கினார். நான்காவது ஓவரில் கோஸ்வாமி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து வில்லி யம்சன் ஆட்டமிழந்தார். அதன்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சாகிப் அல் ஹசன் 12 ஓட்டங்களிலும் மணிஷ் பாண்டே 8 ஓட்டங்களிலும் யூசுப் பதான் 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

வெற்றிக் களிப்பில் கொண்டாட்ட மழையில் நனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். படம்: ஏஎஃப்பி