வயிறு குலுங்க வைக்க வரும் புதிய படம் 'செம'

வயிறு குலுங்க வைக்க வரும் புதிய படம் 'செம'

1 mins read
4aa05922-e08e-4065-b0f4-cfdbb87ae4bb
-

வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் செம. இவர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவரது கதைக்கு பாண்டிராஜ் வசனம் எழுத, விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் உருவாகி வருகிறது செம. யோகிபாபு, கோவை சரளா, சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா பினு நடிக்கிறார். வள்ளிகாந்தின் நண்பர் ஒருவரது திருமணத்தின்போது நிகழ்ந்த சில சம்பவங்களின் தொகுப்புதான் இப்படமாம். "அதை ரசிகர்கள் நன்கு ரசிக்கும்படியான திரைக்கதை, வசனங்களுடன் படமாக உருவாக்குகிறோம்.

இதில் ஜனா என்பவரை அறிமுகப்படுத்துகிறோம்," என்கிறார் வள்ளிகாந்த். இது முழு நீள நகைச்சுவைப் படமாக இருக்கும். ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையுடன் திரையரங்குக்கு வரலாம் என உத்தரவாதம் அளிக்கிறார் பாண்டிராஜ். அதிலும் ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் வெடிச்சிரிப்பை ஏற்படுத்தும் என்று படக்குழுவினரும் தெரிவிக்கின்றனர்.