புதுடெல்லி: இவ்வாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று டி20, மூன்று ஒருநாள், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கடந்த முறை அங்கு சென்ற போது இந்திய அணி டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்டது. இம்முறையும் அப்படி நிகழாமல் தடுக்க, முன்கூட்டியே அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்துகொண்டு ஆயத்த மாக விரும்பினார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. இதை அடுத்து, அங்குள்ள கவுன்டி அணிகளில் ஒன்றான சரே அணி சார்பில் அடுத்த மாதம் சில போட்டிகளில் ஆடவிருந்தார். இந்த நிலையில், அவருக்கு கழுத்தில் காயமேற்பட்டுள்ளதால் கவுன்டி போட்டிகளில் இருந்து அவர் விலக நேரிட்டது.
கவுன்டி போட்டிகளில் இருந்து விராத் கோஹ்லி விலகல்
1 mins read