ப. பாலசுப்பிரமணியம்
தொழில்முனைவர் ஒருவர், கடற்துறை அதிகாரி ஒருவர், விளம்பரப் பிரிவு அதி காரி ஒருவர் ஆகிய மூன்று சிங்கப்பூரர் களையும் இங்கிலாந்தின் லிவர்பூல் காற் பந்துக் குழுவின் பந்தம் இணைக்கிறது. இந்த மூன்று சிங்கப்பூரர்களும் அக் குழுவின் தீவிர ரசிகர்கள். சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 2.45 மணிக்கு நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை நேரடியாகக் காண இவர்கள் உக்ரேன் நாட்டின் தலைநகரான கீவ் நக ருக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அக்கிண்ணத்தை வெல்லும் துடிப்புடன் இருக்கும் ஸ்பானிய ஜாம்பவான் ரியால் மட்ரிட் குழுவுடன் லிவர்பூல் இறுதி ஆட் டத்தில் பொருதுகிறது.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து லிவர்பூல் குழு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. "அடுத்த முறை இதுபோன்று ஏதாவது செய்வேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இளம் பருவத்திலேயே இதை எல்லாம் செய்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு நேரடியாக ஆட்டத்தை காண வேண்டும் என பட்டென முடிவு எடுத்தேன்," என்றார் விளம்பரப் பிரிவு அதிகாரி திரு அம்ரேஷ் குமார், 27.
கீவ் நகரில் தம் மகன் ரஃபாயல் ராஜுடன் (இடது) திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா.

