கியேவ்: லிவர்பூலின் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி கிண்ணக் கனவு கலைந்தது. நேற்று அதிகாலை உக்ரேன் தலைநகர் கியேவ்வில் நடைபெற்ற இறுதி ஆட்டம் லிவர்பூல் ஆட்டக் காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கெட்ட கனவாக முடிந்தது. இறுதி ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவான் ரியால் மட்ரிட்டை எதிர்த்து லிவர்பூல் களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு குழுக்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ரியாலின் செர்ஜியோ ராமோசும் லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலாவும் பந்தை நோக்கி விரைந்தனர். இருவரும் முண்டியடித்துக் கொண்டு சென்றபோது சாலா கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஐந்து நிமிடங் கள் கழித்து, காயம் காரணமாக சாலா ஆட்டத்தைவிட்டு வெளி யேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆட்டத்தைக் கைப்பற்றி கிண்ணத்துடன் கொண்டாட்ட மழையில் நனையும் ரியால் வீரர்கள்.

