மெஸ்ஸி: அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜெண்டினா அல்ல

மெஸ்ஸி: அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜெண்டினா அல்ல

1 mins read
b29a54dc-b5aa-48d4-aa70-deffa5c9869c
-

பியூனஸ் அயர்ஸ்: உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவ ராகத் திகழ்ந்தாலும் ஒருமுறைகூட உலகக் கிண்ணத்தை வெல்ல முடியா மல் தவித்து வருகிறார் அர்ஜெண்டினா வின் லயனல் மெஸ்ஸி (படம்). ஐந்தாவது முறையாக தங்கக் காலணி விருது வென்ற பார்சிலோனா ஆட்டக்காரரான மெஸ்ஸி, இம்முறை யும் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணி அர்ஜெண்டினா அல்ல என்று கூறியுள்ளார்.

"உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக நாங்கள் திகழவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். "ஆனால், எங்களது அணியில் அனுபவமும் திறமையும் மிக்க மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து வோம். கிண்ணம் வெல்ல முடியும் என்றும் நம்புகிறோம்.

மேலும்