பிரேசில் நாட்டின் ஃபாபினோ இனி லிவர்பூல் ஆட்டக்காரர்

பிரேசில் நாட்டின் ஃபாபினோ இனி லிவர்பூல் ஆட்டக்காரர்

1 mins read
f691b8b0-9fd4-4054-8511-5b0318762014
-

லண்டன்: பிரேசில் மத்திய திடல் ஆட்டக்காரர் ஃபாபினோ (படம்) உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு லிவர்பூல் காற்பந்துக் குழு சார்பாக விளையாடவுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பிரான்சின் மொனாக்கோ குழுவிற்காக விளையாடி வந்த 24 வயதான ஃபாபினோ 105 போட்டிகளில் 22 கோல்களைப் போட்டுள்ளார். இவரை வாங்க முதற்கட்ட மாக 39 மில்லியன் பவுண்டு தர லிவர்பூல் ஒப்புக்கொண்டது. ஆனால், ஊக்கத்தொகை உள்ளிட்டவை சேர்த்து அவ ரது விலை மேலும் நான்கு மில்லியன் பவுண்டு அதிகரிக் கும் சாத்தியம் உள்ளது.