உலகக் கிண்ணக் குழு நிலை போட்டிகளில் எகிப்து வீரர் சாலா விளையாடுவது சந்தேகம்

1 mins read
36311053-79cc-4af7-9f39-db3dde43acee
-

மட்ரிட்: லிவர்பூல் காற்பந்துக் குழு வீரரும் எகிப்து வீரருமான சாலா உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலை போட்டிகளில் விளையாடு வது சந்தேகம் என்று கூறப்படுகி றது. கடந்த வாரம் நடந்த சாம்பி யன்ஸ் லீக் இறுதிப் போட்டியின் போது, ரியால் மட்ரிட் குழுத் தலை வர் செர்ஜியோ ரமோஸ் மோதிய தால் முகமது சாலாவிற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக சாலா சிகிச்சை பெற்று வரும் நிலையில் லிவர்பூல் குழுவின் மருத்துவர் ஒருவர், "இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைய சாலாவிற்கு மூன்று அல்லது நான்கு வாரக் காலம் ஆகலாம். "ஆனால், அவர் விரைவில் குணமடைவதற்கான அனைத்து முயற்சிளையும் நாங்கள் மேற் கொண்டு வருகிறோம்," என்று கூறினார்.

ரியால் மட்ரிட் வீரர் செர்ஜியோ ரமோஸ் மோதியதால் லிவர்பூல் வீரர் சாலாவிற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி