காற்பந்து போட்டிகள்: பொது இடங்களில் காட்ட பிரான்ஸ் தடை

காற்பந்து போட்டிகள்: பொது இடங்களில் காட்ட பிரான்ஸ் தடை

1 mins read

பிரான்ஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைப் பொது இடங்களில் திரையிட பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. அண்மைக்காலமாக அதி கரித்துள்ள தீவிரவாத தாக்குதல் களை மனதிற் கொண்டும் நாட் டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியும் அந்நாட்டின் உள் துறை அமைச்சு இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளது. அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீவிரவாத மிரட் டல்கள் நிறைந்துள்ள தற்போ தைய நிலையில், கடந்த முறை ஐரோப்பிய கிண்ணப் போட்டி களின் போது கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும். "எனவே பொது இடங்களில் பெரிய திரையில் காற்பந்துப் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.