பியூனஸ் அயர்ஸ்: காற்பந்து வீரர் மெஸ்ஸியின் 'ஹாட்=ரிக்' கோல் அர்ஜெண்டினா உலகக் கிண்ணம் வெல்லக்கூடும் என்ற அதன் ரசி கர்களின் நம்பிக்கையை வலுப்ப டுத்தும் விதமாக அமைந்துள்ளது. நேற்று நடந்த அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் ஹெய்டி அணியை நான்கு கோல்கள் வித் தியாசத்தில் வீழ்த்தியது அர்ஜெண் டினா. பெனால்டி வாய்ப்பில் முதல் கோலைப் போட்ட மெஸ்ஸி, பிற் பாதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டார்.
இது அனைத்துலக ஆட்டத்தில் மெஸ்ஸியின் 64வது கோலாகும். அதைத்தொடர்ந்து மெஸ்ஸி யின் உதவியுடன் செர்ஜியோ அகுவேரோவும் ஒரு கோல் போட அர்ஜெண்டினாவின் கோல் எண் ணிக்கை நான்கானது. காயம் காரணமாக 11 பேர் அணியில் களம் இறங்காத அகுவேரோ, மாற்று ஆட்டக்கார ராக பின்னர் களம் கண்டார். ஆனால், ஹெய்டி அணி கோல் எதுவும் போடாததால், 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
ஹெய்டி அணிக்கு எதிராக கோல் போடும் அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

