இந்த மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் காற்பந்து சரித்திரத்தை மாற்றி எழுதும் வாய்ப்பு பிரேசிலுக்கு உள்ளதாக அந்நாட்டு அணியின் தலைவர் தியாகோ சில்வா கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டி களுக்காக லண்டனில் பயிற்சி செய்து வரும் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் தனக்கு ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் பயிற்சியில் ஈடு பட்டுவரும் அணியின் தலைவர் தியாகோ, "முந்தைய பிரேசில் அணியின் சாதனைகளை எட்டு வது சாத்தியமல்ல. "எனினும் மற்றோர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளையாடி சரித்திரத்தை மாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரேசில் காற்பந்து அணியின் தலைவர் தியாகோ சில்வா. படம்: ஏஎஃப்பி

