மட்ரிட்டில் இருந்து விலகும் ஸிடான்

மட்ரிட்டில் இருந்து விலகும் ஸிடான்

1 mins read
d987bb6f-d1e1-400b-92c3-c267329dff4f
-

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி விருதை ரியால் மட்ரிட் அணிக்கு மூன்றா வது முறையாக பெற்றுக்கொடுத்த பின் நிர்வாகி பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக ஸினடின் ஸிடான் அறிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளாக ரியால் மட்ரிட் அணியின் பயிற்றுநராக பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார் ஸிடான். ஸிடான், வயது 45, நேற்று பெர்னபாவ் அரங்கில் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில், "அடுத்த காற்பந்துப் பருவத்தில் இந்தப் பொறுப்பை நான் தொடரப்போவதில்லை என முடிவெடுத்துள்ளேன்," என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பொறுப்பை ஸிடான் ஏற்றுக்கொண்டார். ரியால் மட்ரிட் குழுவை மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்வதற்கும் ஸ்பானிய காற்பந்து லா லீகா காற்பந்து விருதை வெல் வதற்கும் திரு ஸிடான் காரணமாக இருந்துள்ளார்.

நேற்றைய பேட்டியில், திரு ஸிடானுக்கு அருகே ரியால் மட்ரிட் குழுவின் தலைவர் ஃபியோரென்டினோ பெரசும் அருகில் இருந்தார். "நான் இப்போது என்ன நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன் என்பது குறித்து ரியால் மட்ரிட் அணியின் தலைவர் பெரசிடம் ஓரளவுக்கு விளக்கியுள்ளேன். நான் எடுத்திருக்கும் இந்த முடிவு சற்று வினோதமாக இருந்தாலும் இது எனக்கும் இந்த அணிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நல்லது என்றே கூறுவேன்," என்றார். 2018-06-01 06:00:00 +0800

மேலும்