அவர் கௌரவமாக வந்தார், தனது பணியைச் செய்தார் பின் னர் அதே கௌரவத்துடன் விலகி னார். இப்படித்தான் ரியால் மட்ரிட் அணியின் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்த ஸினடின் ஸிடானின் (படம்) பதவிக் காலத்தையும் அவர் அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு விலகிய விதத்தை யும் அனைவரும் வர்ணிக்கின்றனர். ஸிடான் பதவியை விட்டு விலகுவது என்ற முடிவை அறிவித்தபோது அந்தக் குழுவின் தலைவரான ஃபியோரென்டினோ பெரஸ் அதிர்ச்சியடைந்தார்.
கார்லோ அன்சிலோட்டி, ரஃபாயல் பெனிட்டெஸ், ஜோசே மொரின்யோ என எவ்வளவு பெரிய நிர்வாகியாக இருந்தாலும் அவர்களை எல்லாம் தானே பதவி விலகச் செய்துதான் ரியால் மட்ரிட் குழுவுக்கு பழக்கம். ஆனால், இவரோ மூன்று சாம்பியன்ஸ் லீக் விருதுகளை தொடர்ச்சியாக வென்ற கையுடன் சர்வ சாதாரண மாக பதவியைத் தூக்கி எறிந்த விதம் ரியால் மட்ரிட் தலைமையை திக்குமுக்காட வைத்துள்ளது.

