உலகக் கிண்ண காற்பந்து போட்டி களுக்கு முன்னர் இங்கிலாந்து விளையாடும் இரண்டு நட்புமுறை ஆட்டங்களில் முதலாவது ஆட்டம் நைஜீரியாவுடன் இன்று பின்னிரவு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் வியாழக்கிழமை கோஸ்டா ரிக்காவுடன் அது மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அதன் மூலம் உலகக் கிண்ண ஆட்டங்களில் தன்னை மனோரீதியாக தயார் செய்துகொள்ள இங்கிலாந்து எண்ணியுள்ளது.
'ஜி' பிரிவில் விளையாடும் இங்கிலாந்துக் குழு, பெல்ஜியம், பனாமா, டுனிசியா ஆகிய நாடு களுடன் அந்தப் பிரிவை அலங் கரிக்கிறது. இதில் இங்கிலாந்துக் குழுவுக்கான கோல்காப்பாளரை பொறுத்த வரை இங்கிலாந்து நிர்வாகி கேரத் சௌத்கேட், ஜோர் தான் பிக்ஃபர்ட், ஜேக் பட்லண்ட், நிக் போப் என மூவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். எனினும், பிக்ஃபர்ட்டே இங்கி லாந்து கோல்காப்பாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று காற்பந்து விமர்சகர்கள் நம்புகின்றனர்-.
பயிற்சியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து காற்பந்து வீரர்கள் (இடமிருந்து) டெலி அலி, ஹேரி கேன், ஜேமி வார்டி. படம்: ராய்ட்டர்ஸ்

