தாக்குதலில் வெளுத்துக்கட்டிய பிரான்ஸ்

தாக்குதலில் வெளுத்துக்கட்டிய பிரான்ஸ்

1 mins read
232d6b21-9a34-45c1-8894-bbbdb3874f72
-

நீஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு முன்னதாக அதில் பங்கெடுக்கும் குழுக்கள் நட்புமுறை ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வரிசையில் பிரான்சும் நேற்று அதிகாலை களமிறங்கியது. உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 3=1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. பிரான்ஸின் வெற்றிக்கு அதன் அபாரத் தாக்குதல் திறனே காரணம் என்று கூறினால் அது மிகையன்று.

மின்னல் வேகத்தில் பிரான்ஸ் வீரர்கள் நடத்திய தாக்குதல்கள் இத்தாலியின் தற்காப்பு ஆட்டக்காரர்களைத் திணறடித்தது. ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே பிரான்ஸ் அதன் வலிமையைக் காட்டியது. 8வது நிமிடத்தில் இத்தாலியின் பெனால்டி எல்லைக்குள் பந்து அனுப்பப்பட்டது. பந்தை நோக்கி விரைந்த பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே அதை வலை நோக்கி அனுப்பினார். பந்தை இத்தாலிய கோல்காப்பாளரால் தட்டிவிடத்தான் முடிந்தது. அவர் தட்டிவிட்ட பந்தை இத்தாலிய தற்காப்பு ஆட்டக்காரர்கள் நெருங்குவதற்குள் அதை வலைக்குள் அனுப்பினார் பிரான்ஸின் உம்டிட்டி.

சீறிப் பாய்ந்து பந்தை வலை நோக்கி அனுப்பினார் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே (இடது). அவர் அனுப்பிய இந்தப் பந்தை இத்தாலிய கோல்காப்பாளர் தட்டிவிட்டார். தட்டிவிட்ட பந்தை உமிடிட்டி கோலாக்கினார். படம்: ஏஎஃப்பி

மேலும்