அதிர்ச்சி அளித்த ஆஸ்திரியா

அதிர்ச்சி அளித்த ஆஸ்திரியா

1 mins read
ea873b6e-8c31-458e-8775-c3fbf102ca9e
-

கிளாகன்ஃபோர்ட் (ஆஸ்திரியா): நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி காற்பந்து அணி இம்முறையும் வாகை சூடி உலகக் கிண்ணத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு ஈடேற இன்னும் துடிப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என்று அவ்வணியை எச்சரிக்கும் வகை யில் அமைந்துள்ளது ஆஸ்திரியா விற்கு எதிரான நட்புமுறை ஆட் டத்தில் கிடைத்த தோல்வி. கிட்டத்தட்ட எட்டு மாதங்க ளுக்குப் பிறகு அணிக்குத் திரும் பிய ஜெர்மனி கோல்காப்பாளர் மானுவல் நோயாரைக் காற்பந்துக் களம் தோல்வியுடன் வரவேற்றது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் மெசுட் ஓஸில் அடித்த கோலால் 1-0 என்ற முன்னிலையுடன் இடை வேளைக்குச் சென்றது ஜெர்மனி.

எட்டு மாதங்களுக்குப் பின் காற்பந்துக் களம் கண்ட ஜெர்மனி கோல்காப்பாளர் மானுவல் நோயார், ஆஸ்திரியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டாவது கோலை விட்டுக்கொடுத்த விரக்தியில் இப்படி எதிர்வினை ஆற்றுகிறார். படம்: ஏஎஃப்பி

மேலும்