லண்டன்: முற்பாதி ஆட்டத்தில் கேரி கேஹிலும் அணித்தலைவர் ஹேரி கேனும் கோலடிக்க, இங்கி லாந்துக் காற்பந்து அணி 2-1 என்ற கணக்கில் நைஜீரியாவைத் தோற்கடித்து, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான பயிற்சியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. புகழ்பெற்ற வெம்பிளி விளை யாட்டரங்கில் நடந்த இந்த ஆட் டத்தின் ஏழாவது நிமிடத்தில் கேஹில் தலையால் முட்டி அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. அதன்பின் 39வது நிமி டத்தில் கோல் கட்டத்தின் விளிம் பிலிருந்து பந்தை வலைக்குள் தள்ளி முன்னிலையை இரட்டிப்பாக் கினார் 24 வயதிலேயே தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் கேன்.
வெம்பிளி விளையாட்டரங்கில் நைஜீரிய அணிக்கெதிரான நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது கோலை அடிக்கிறார் அதன் தலைவர் ஹேரி கேன் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

