லிவர்பூல்: காயத்தில் இருந்து பூரண குணமடைந்து மீண்டும் காற்பந்துக் களத்தில் அடியெடுத்து வைத்த முதல் போட்டியிலேயே கோலடித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் தெரிவித்துள்ளார். இம்மாதம் 14ஆம் தேதி ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு குரோவேஷியா வுடன் நட்புமுறைக் காற்பந்து ஆட்டத்தில் பிரேசில் மோதியது. காயம் காரணமாக மூன்று மாதகாலம் ஓய்வில் இருந்தபின் நெய்மார் களம் கண்ட முதல் ஆட்டம் இதுதான். இந்த ஆட்டத்தில் நெய்மார் 69வது நிமிடத்திலும் ஃபிர்மினோ கூடுதல் நேரத்திலும் அடித்த கோல்களால் பிரேசில் 2=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் பேசிய நெய்மார், "நான் மிகவும் நேசிக்கும் காற்பந்து ஆட்டத்தை மீண்டும் விளையாட முடிந்ததில், அதிலும் கோலுடன் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி," என்று சொன்னார்.
இடைவேளைக்குப் பின் களமிறங்கியபோதும் அணியின் முதல் கோலை அடித்ததால் நட்சத்திர வீரர் நெய்மாரை கொண்டாடும் சக பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

