மேன்யூவுடன் இணையும் பிரேசில் வீரர்

மேன்யூவுடன் இணையும் பிரேசில் வீரர்

1 mins read

மான்செஸ்டர்: பிரேசில் மத்தியத் திடல் காற்பந்து வீரரான ஃபிரெட், உக்ரேனின் ஷக்தர் டொனெட்ஸ்க் குழுவிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு இடம் மாறவுள்ளார். மருத்துவச் சோதனைகளுக்காக 25 வயதான ஃபிரெட் நேற்று மான்செஸ்டர் சென்றதாக 'கோல்' இணையத்தள செய்தி கூறியது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஃபிரெட் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் 52.5 மில்லியன் பவுண்டு கொடுத்து மேன்யூ அவரை வாங்குவதாகவும் அந்தச் செய்தி தெரிவித்தது.

மேலும்