செர்பியா தடுமாற்றம், மொரோக்கோ மெருகேற்றம்

செர்பியா தடுமாற்றம், மொரோக்கோ மெருகேற்றம்

1 mins read

ஸுரிக்: உலகக் கிண்ணக் காற் பந்து இறுதிச் சுற்றுப் போட்டி களுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகளுள் ஒன்றான செர்பியா, பயிற்சிப் போட்டியில் மந்தமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அதிர்ச்சி அளித்தது. சிலியுடன் நேற்று முன்தினம் பின்னிரவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா தோல்வியைத் தழுவியது.

தென்னமெரிக்க வெற்றியாள ரான சிலி அணி வீரர்கள் பந்துடன் கோல் பகுதியை நோக்கி முன்னேறியபோதெல்லாம் செர்பிய ஆட்டக்காரர்களிடம் தடுமாற்றம் காணப்பட்டது தெளி வாகத் தெரிந்தது. உலகக் கிண்ணப் போட்டி களுக்குத் தகுதிபெறாதபோதும் சிலி வீரர்களின் ஆட்டம் அசர வைக்கும்படியாக இருந்தது. இருந்தாலும் அவர்களின் முயற் சிக்கு 89வது நிமிடத்தில்தான் பலன் கிட்டியது.

மேலும் செய்திகள்