ரமோஸ்: என் கையைப் பிடித்து இழுத்து விழுந்ததால் சாலாவுக்கு காயம்

ரமோஸ்: என் கையைப் பிடித்து இழுத்து விழுந்ததால் சாலாவுக்கு காயம்

1 mins read
5c132cb8-8e9c-4d8d-9319-2a979f64e962
-

சாம்பியன்ஸ் லீக் இறுதிக் காற் பந்துப் போட்டியில் லிவர்பூல் வீரர் முகமது சாலாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு அவரே பொறுப்பு என்பதுபோல் ரியால் மட்ரிட் தற்காப்பு ஆட்டக்காரரான செர் ஜியோ ரமோஸ் கூறியுள்ளார். அந்த ஆட்டத்தில் தோள் பட்டை காயம் காரணமாக சாலா கண்ணீரும் கம்பலையுமாக திட லை விட்டு வெளியேறினார். இதுபற்றிக் கருத்துக் கூறிய ரியால் மட்ரிட் தற்காப்பு ஆட்டக் காரரான செர்ஜியோ ரமோஸ், முதன்முதலில் சாலா தான் தனது கையைக் கோர்த்தபடி தம்மீது மோதியதாகவும் அதுவே அவரது தோள்பட்டை காயத்துக்கு கார ணம் என்றும் கூறியுள்ளார். சாலா, வலி நிவாரணமாக "ஊசி மருந்து போட்டுக்கொண் டிருந்தால் அந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் விளையாடி யிருக்கலாம்," என்றும் ரமோஸ் முதன்முறையாக தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

மேலும் செய்திகள்