இவ்வாண்டு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இங்கி லாந்து அணியின் மத்திய திடல் ஆட்டக்காரர்களில் ஒரு வராக தேர்வுசெய்யப்பட எரிக் டையர், ஜோர்டன் ஹென் டர்சன் ஆகிய இரு வரும் போட்டியிடப் போவதாக இங்கி லாந்து அணி பயிற்று விப்பாளர் கேரத் சவுத்கேட் தெரிவித்துள்ளார். ஆட்டம் தொடங்கும் போது அணியின் சார்பாக களமிறக்கப்படும் முதல் 11 ஆட்டக்காரர்களில் மத்திய திடல் ஆட்டக்காரராக இரு வரில் ஒருவர் மட்டுமே விளையா ட முடியும் என சவுத்கேட் கூறினார். டோட்டன்ஹம் ஹாட்ஸ் பர் வீரர் டையரும் லிவர்பூலின் ஹென்டர்சனும் இதற்கு முன் பாக சவுத்கேட் தலைமைத்து வத் தின்கீழ் இங்கிலாந்தின் அணித் தலைவர்களாகப் பொறுப்பு விகித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் மத்திய திடல் ஆட்டக்காரர்களான எரிக் டையர் (இடது), ஜோர்டன் ஹென்டர்சன். படம்: ஏஎஃப்பி

