அறுவை சிகிச்சையின்போது நடனம்; மருத்துவர் இடைநீக்கம்

அறுவை சிகிச்சையின்போது நடனம்; மருத்துவர் இடைநீக்கம்

1 mins read

நியூயார்க்: 'ஹிப் ஹாப்' பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த தோல் மருத்துவரை அமெரிக்க மருத்துவ ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. டாக்டர் வின்டெல் டேவிஸ் பவுட்டே அறுவை சிகிச்சை செய்துகொண்டே நடனம் ஆடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது டாக்டர் டேவிஸ் பவுட்டேவுக்கு எதிராக வழக்கு தொடுத்து இழப்பீடு கோரத் திட்டமிட்டுள்ளார். டாக்டர் டேவிஸ் பவுட்டேவின் மெத்தனப்போக்கினால் தமக்கு உடல் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்