சாலா: கனவு நனவாகியுள்ளது

சாலா: கனவு நனவாகியுள்ளது

1 mins read
98b24595-57dc-40d4-a2cd-7867130aeab3
-

ரஷ்யா வந்தடைந்துள்ள எகிப்து காற்பந்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலாவும் இடம்பெற்றுள்ளார். தாம் ரஷ்யா வந்ததே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கே என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் ரியால் மட்ரிட் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணிக்காக விளையாடியபோது இவருக்கு காயம் ஏற்பட்டது. மூன்று வாரங்கள் சாலா ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். "நான் அணியில் இடம்பெறாவிடில், உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் இப்போட்டியில் நான் ஓர் அங்கமாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது," என்றார் சாலா.

மேலும் செய்திகளுக்கு