இப்போதைக்கு உலகின் மிகச் சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராக அறியப்படும் லயனல் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் 'மின்னல் வேக' திடல்தட வீரராக அறியப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட். மற்றவர்களைப் போல உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண தாமும் ஆர்வமாக இருப்பதாகக் கூறும் போல்ட், "சிறப்பாக ஆடும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறவும், ஏன் உலகக் கிண்ணத்தை வெல்லவும் அர்ஜெண்டினாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது," என்றும் தெரிவித்துள்ளார். (படத்தில்) கத்திரிக்கோலைக் கொண்டே ரசிகரின் பின்னந்தலையில் மெஸ்ஸியின் உருவத்தை தத்ரூபமாக வடிக்கும் செர்பிய சிகையலங்கார நிபுணர் மாரியோ ஹுவாலா. படம்: ஏஎஃப்பி
அர்ஜெண்டினாவை ஆதரிக்கும் பிரபலம்
1 mins read
-

