மாஸ்கோ: நட்சத்திர ஆட்டக்கார ரான லயனல் மெஸ்ஸி (படம்) மீதுள்ள சுமையைக் குறைக்க வேண்டும் என்று சக அர்ஜெண் டினா ஆட்டக்காரர்களிடம் வலி யுறுத்தியுள்ளார் அவ்வணியின் கோல்காப்பாளர் நகுவல் குஸ்மான். குரோவேஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா ஆகிய அணிகளுடன் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியை மீண்டும் தலைமை தாங்கி வழிநடத்தவுள் ளார் 30 வயதான மெஸ்ஸி. 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்ற விரும்பும் அர்ஜெண்டினா அணி மெஸ்ஸியையே பெரிதும் நம்பி இருக்கிறது. இந்த நிலையில், "அணியின் மற்ற ஆட்டக்காரர்கள் முடிந்த அளவிற்கு மெஸ்ஸி மீதான நெருக்கடியைக் குறைக்கவேண்டி யது அவசியம்," என்று குஸ்மான் தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவின் முதன்மை கோல்காப்பாளரான செர்ஜியோ ரொமேரோ காயமடைந்ததால் அவ ருக்குப் பதிலாக குஸ்மான் சேர்க் கப்பட்டுள்ளார். "அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி மிக முக்கியமானவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருக்குப் பக்கபலமாக இருப்பது எப்படி என்பதை நாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அதே நேரத்தில், அவரும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண் டும்," என்று குஸ்மான் செய்தி யாளர்களிடம் சொன்னார்.

