சட்டையை அணிய சிரமப்படும் சாலா

சட்டையை அணிய சிரமப்படும் சாலா

1 mins read
55bc94a6-e417-47ca-b6f0-605a7f25786a
-

எகிப்தின் தேசிய அணியைச் சேர்ந்த நட்சத்திர காற்பந்தாட் டக்காரர் முகமது சாலா, தோள்பட்டை காயத்தால் தமது அணியின் சட்டையை அணி வதற்கு சக அணியினர் மூவரின் உதவி தேவைப்பட்டதாக, அக்குழுவின் பயிற்சியின்போது அவர்களைப் பார்த்துக்கொண் டிருந்த ஏஎஃப்பி நிருபர்கள் தெரிவித்தனர். 1990க்கு பிறகு, மீண்டும் கால் இறுதிக்கு முந்திய சுற்றுக்குச் செல்லும் கனவு, லிவர்பூல் ஆட்டக்காரரான சாலாவின் மூலம் நனவாகும் என்று நினைத்தது எகிப்து. இருந்தபோதும், கடந்த வெள்ளிக்கிழமை, உருகுவேயிடம் எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றதை சாலா, திடலுக்கு வெளியிலிருந்து காண வேண்டியிருந்தது. உருகுவேயைச் சேர்ந்த தற்காப்பு ஆட்டக்காரர் ஜோசே கிமெனெஸ், 89வது நிமிடத்தில் தனது தலையால் முட்டி கோலடித்து தமது நாட்டினரை களிப்பில் ஆழ்த்தி னார்.

தோள்பட்டையில் காயமடைந்த சாலாவுக்குத் தோள் கொடுக்கும் சக விளையாட்டாளர்கள். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்