இவ்வாண்டின் உலகக் கிண்ண இறுதிச்சுற்றை ஏற்று நடத்தும் ரஷ்யா தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருக்கலாம். ஆனால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் ரஷ்யாவின் கனவுக்கு எகிப்து மிகப் பெரிய தடையாக அமையக்கூடும். எகிப்து அதன் முதல் ஆட்டத்தில் உருகுவேயிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்று இருக்கலாம். ஆனால் சிறப்பாக விளையாடினாலும், அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. மேலும் அதன் நட்சத்திர ஆட்டக்காரர் முகமது சாலா அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இன்று பின்னிரவு நடைபெறும் 'ஏ' பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் தனது அணிக்குத் திரும்புகிறார் சாலா. அது ரஷ்ய அணிக்குத்தான் பேரிடியாக விளங்கும். சாலா இல்லாத எகிப்து வேறு விதமாக விளையாடி யது, சாலாவுடன் எகிப்தின் ஆட்டம் அனல் பறக்கும் என்றார் ரஷ்யாவின் முன்னணி ஆட்டக்காரர் அலெக்ஸெய் மிராஞ்சுக். இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவில் விளையாடிய முதல் காற்பந்துப் பருவத்திலேயே அக்குழுவிற்காக 44 கோல்கள் போட்டவர் சாலா.
ரஷ்யாவுக்கு மிகப் பெரிய தடையாகத் திகழும் எகிப்து
1 mins read
-

