சோச்சி: உலகக் கிண்ணப் பிரிவுச் சுற்று ஆட்டங்களைப் பொறுத்தமட்டில், பெல் ஜியம் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்து வருகிறது. இம்முறை 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ள பெல்ஜியம், உலகக் கிண்ணப் போட்டிகளில் முதன்முறையாகக் கள மிறங்கி இருக்கும் பனாமாவை 3=0 என்ற கோல் கணக்கில் நேற்று முன் தினம் தோற்கடித்தது. இதன்மூலம், உலகக் கிண்ணப் பிரிவுச் சுற்றில் கடைசியாகத் தான் பங்கேற்ற பத்து ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்காத அணியாக பெல்ஜியம் திகழ்ந்து வரு கிறது. அதில் ஐந்தில் வெற்றியும் ஐந்தில் சமநிலையும் கண்டுள்ளது.
முற்பாதி ஆட்டம் கோலேதுமின்றி முடிந்தாலும் பிற்பாதியில் பெல்ஜியத்தின் கையே ஓங்கியிருந்தது. டிரைஸ் மெர்ட்டென்ஸ் 47வது நிமிடத் தில் அற்புதமாக கோலடித்து முன்னிலை பெற்றுத் தர, 69வது, 75வது நிமிடங் களில் இரு கோல்களை அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார் பெல்ஜியத்தின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொமேலு லுக்காகு. இம்முறை உலகக் கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்படாவிடினும், பல அதிர்ச்சிகளை அளிக்கக்கூடிய அணிகளுள் ஒன்றாக பெல்ஜியம் திகழும் எனக் காற்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். பெல் ஜிய வீரர்களின் செயல்பாட்டைக் கண்ட போது அந்தக் கணிப்பு மெய்யாகலாம் என்றெண்ண வைத்துள்ளது.
முன்னே பாய்ந்து தலையால் முட்டி தமது இரண்டாவது கோலை அடிக்கும் பெல்ஜியம் அணியின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ரொமேலு லுக்காகு (எண் 9). படம்: ராய்ட்டர்ஸ்

