உலகக் கிண்ணக் காற்பந்து ஆட் டங்கள் பரபரப்பாக நடந்து முடிந்த பின்னர் வழக்கமாக வீணாக்கப் பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட கோப்பைகள், தாள்கள் போன்றவை குப்பைகளாகக் குவிந்து கிடப்பது வழக்கம். இவற்றைச் சுத்தப்படுத்தியதன் மூலம் ஐப்பானிய காற்பந்து ரசிகர்கள் உலகின் பாராட்டைப் பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு ரஷ்யாவின் சரன்ஸ்க் நகரில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. அதனைக் கொண்டாடிய ஜப் பானிய ரசிகர்கள் தாங்கள் அமர்ந் திருந்த இடத்தில் சிதறிக் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத் தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்கூட்டியே கொண்டு வந் திருந்த பெரிய பைகளில் குப்பை களை அவர்கள் சேகரித்தனர். விளையாட்டைக் காண வந்தபோது எப்படி இருக்கைகள் சுத்தமாக இருந்தனவோ அதேபோல அவற்றைச் சுத்தப்படுத்திவிட்டுச் சென்றனர்.
குப்பைகளை அகற்றி பாராட்டு பெற்ற காற்பந்து ரசிகர்கள்
1 mins read

