அதிர்ச்சி தந்த ஜப்பான்

அதிர்ச்சி தந்த ஜப்பான்

1 mins read
45c826f6-0d7f-45aa-8212-367c29d4363b
-

சரன்ஸ்க்: நட்சத்திர ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகெஸ் இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய போதும் கொலம்பியாவைத் தோல்வியின் பிடியில் இருந்து மீட்க முடியாமல் போனது. அவரது வருகைக்கு முன்னரே போதிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது முன்னணி ஆசியக் குழுவான ஜப்பான். ஆட்டத்தின் மூன்றாம் நிமிடத்திலேயே கொலம்பியாவின் கார்லோஸ் சான்செஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது அந்த அணிக்குப் பெரும் பாதகமாக அமைந்தது. நடப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் சிவப்பு அட்டை பெற்ற முதல் வீரர் என்ற வேண்டாப் பெருமையும் அவரைச் சென்றடைந்தது. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியதன் மூலம் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் தென்னமெரிக்க அணியைத் தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.

தொடக்கத்தில் கிட்டிய பெனால்டி வாய்ப்பின் மூலம் நட்சத்திர வீரர் ‌ஷின்ஜி ககாவா கோலடிக்க, 39வது நிமிடத்தில் கொலம்பியாவின் குவின்டெரோ அடித்த கோலால் ஆட்டம் சமனுக்கு வந்தது. இருப்பினும், 73வது நிமிடத்தில் யுயா ஒசாகோ தலையால் முட்டி கோல் போட, வெற்றி ஜப்பான் வசமாகியது. அடுத்த ஆட்டங்களில் ஜப்பான் செனகலையும், கொலம்பியா போலந்தையும் எதிர்கொள்ள இருக்கின்றன. (படத்தில்) ஜப்பானின் இரண்டாவது கோலை அடிக்கும் யுயா ஒசாகோ (நடுவில்). படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்