இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செர்தாலா என்ற ஊரைச் சேர்ந்த கிளிஃபின் பிரான்சிஸ், 28, என் பவர் தீவிர காற்பந்து ரசிகர். அர் ஜெண்டினாவின் வீரர் லயனல் மெஸ்ஸிதான் அவருக்கு உயிர். ரஷ்யாவில் நடக்கும் உலகக் காற்பந்துப் போட்டியையும் அதில் தன்னுடைய மெஸ்ஸி விளையாடும் அழகையும் எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்ற வேட்கையில் பிப்ரவரி 23ஆம் தேதி ரஷ்யா புறப்பட்டார் பிரான்சிஸ்.
முதலில் துபாய்க்கு விமானத் தில் பறந்தார். அங்கிருந்து படகில் ஈரான் போனார். ஈரானிலிருந்து ரஷ்ய தலைநகருக்கு 4,200 கி.மீட் டருக்கும் அதிக தூரம் போகவேண் டும். சைக்கிளிலேயே சென்றுவிட லாம் என்று அவர் முடிவு செய்தார். துபாயில் $700 கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கினார். சைக்கிளு டன் மார்ச் 11ஆம் தேதி ஈரானில் பண்டார் அப்பாஸ் துறைமுகம் சென்று சேர்ந்தார். அங்கு 45 நாட் கள் கழித்தார். இரண்டு நாட்கள் மட்டும்தான் ஹோட்டலில் தங்கி னார். மற்ற நாட்களில் ஈரான் மக்கள் பலரும் பிரான்சிஸை அழைத்து உபசரித்தனர்.
ஈரானிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், அசர்பைஜான் போய் அங்கு இந்தியர்கள் சில ரைக் கண்டு அவர்களுடன் தங்கி பிறகு ஜார்ஜியாவை அடைந்தார். ஆனால் குடிநுழைவு அதிகாரி கள் அவரைத் திருப்பிவிட்டனர். அசர்பைஜானுக்கும் ஜார்ஜியாவுக் கும் இடையில் ஒரு நாள் மாட்டிக் கொண்ட பிரான்சிஸ், கடைசியில் அவசர விசா மூலம் அசர்பை ஜானுக்கே திரும்பினார்.
ரஷ்யாவில் நடக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியைக் காண சைக்கிளில் சென்ற கிளிஃபின் பிரான்சிஸ், வழியில் அசர்பைஜானில் குவா என்ற ஊரில் பலரை நண்பர்களாக்கிக் கொண்டு பயணத் தைத் தொடர்ந்தார். தனது இந்த சைக்கிள் பயணம், இந்தியாவில் குறைந்தது ஒரு பிள்ளையிடமாவது காற்பந்து நாட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் கிளிஃபின் பிரான்சிஸ். படம்: கிளிஃபின் பிரான்சிஸ்