நம்பிக்கையுடன் நெய்மார்

நம்பிக்கையுடன் நெய்மார்

1 mins read
d1c549bd-eac4-4726-8fb7-b896e93d38f7
-

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சுவிட்சர் லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத் தில் பிரேசில் அணியின் செயல் பாடு ஏமாற்றமளித்த நிலையில், கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக இன்று நடக்கவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் தங்களின் ஆட்டம் மேம்பட்டதாக இருக்கும் என்று நெய்மார் நம்பிக்கை தெரிவித்துள் ளார். நெய்மார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ள போதும் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் அணி, சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஆடிய விதம் கண்டு ரசிகர்கள் ஏமாந்து போயினர். போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்ததற்கு நடுவர்களும் ஒரு காரணம் எனச் சாடிய நெய்மார், தமது அணியினருடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்