ரொனால்டோ=ஆக அதிக கோலடித்த ஐரோப்பியர்

ரொனால்டோ=ஆக அதிக கோலடித்த ஐரோப்பியர்

1 mins read
1db60423-9c5b-4cb0-86a1-597c22ae0989
-

மாஸ்கோ: ஸ்பெயினுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான்காம் நிமி டத்தில் தமது கோல் வேட்டையைத் தொடங்கிய போர்ச்சுகல் அணித் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான இரண்டாவது ஆட்டத் திலும் நான்காவது நிமிடத்தில் கோலடித்து வியப்பளித்தார். முதல் ஆட்டத்தில் அடித்த 'ஹாட்ரிக்' கோல்களால் பல சாத னைகளை மாற்றி எழுதிய அவ ருக்கு மொரோக்கோவிற்கு எதிராக விழுந்த கோலும் சாதனை கோலாக அமைந்தது.

அனைத்துலகப் போட்டிகளில் ரொனால்டோவிற்கு இது 85வது கோல். இதன்மூலம் அதிக கோல் அடித்த ஐரோப்பிய ஆட்டக்காரர் எனும் பெருமையை அவர் பெற்றார். ஹங்கேரி ஆட்டக்காரர் புஸ்கஸ் 84 கோல்களை அடித்திருந்ததே முன்னைய சாதனை. உலகளவில் பார்க்கையில், அதிக கோலடித்தோர் வரிசையில் ஈரானின் அலி டாயிற்கு (109) அடுத்ததாக இரண்டாம் நிலையில் இருக்கிறார் ரொனால்டோ. ஆட்ட நாயகன் விருது வென்ற ரொனால்டோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது இரண்டே கேள்வி களுக்கு மட்டும் விடையளித்து விட்டு, அறையைவிட்டு வெளி யேறினார்.

ரொனால்டோவின் இந்த கோல், மொரோக்கோவை உலகக் கிண்ணத் தொடரைவிட்டே வெளியேற்றிவிட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்