ஆட்டம் கண்ட அர்ஜெண்டினா

ஆட்டம் கண்ட அர்ஜெண்டினா

1 mins read
6951f6b4-f2a4-44cc-ab69-1623f23f1aaa
-

நிஸ்னி நோவ்கொரோட்: பிரேசிலில் 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதி வரை முன்னேறியும் நூலிழையில் கைவிட்டுப்போன கிண்ணத்தை இம்முறை எப்படியும் வென்றே தீரும் முனைப்புடன் களமிறங்கியது லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. ஆனால், அர்ஜெண்டினாவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அவ்வணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தனது முதல் ஆட்டத்தில் ஐஸ் லாந்துடன் 1-1 சமநிலை கண்ட அர்ஜெண்டினா, இரண்டாவது ஆட் டத்தில் குரோவே‌ஷியாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய அர்ஜெண்டினாவுக்குக் கடும் சவாலாக விளங்கியது குரோ வே‌ஷியா. முற்பாதியில் கிடைத்த அருமையான கோல் வாய்ப்பைக் கோட்டைவிட்டார் அர்ஜெண்டினா வின் என்ஸே„ பெரெஸ்.

இடைவேளை வரை எந்த அணி யாலும் கோலடிக்க முடியவில்லை. இருந்தாலும், இரண்டாம் பாதியில் அர்ஜெண்டினா கோல்காப்பாளர் கபெல்லரோ செய்த இமாலயத் தவறு அவ்வணிக்குப் பின்னடைவைத் தேடித் தந்தது. கோல் கட்டத்திற்குள் இருந்தபடி பந்தை தூக்கிப் போட்டு அடிக்க முயன்றார் கபெல்லரோ. எதிர்பாராத விதமாக, பந்து கோல் கட்டத்தை விட்டே தாண்டவில்லை. அருகிலேயே நின்றிருந்த குரோவே‌ஷியாவின் ஆன்டே ரெபிச் லட்டுபோல் சிக்கிய வாய்ப்பைத் தவறவிடாது மிக எளி தாக வலைக்குள் உதைத்தார்.

அற்புதமாக கோலடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்து, சாதித்த உற்சாகத்தில் குரோவே‌ஷியா அணித்தலைவர் லூக்கா மோட்ரிச். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்