ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசில், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், சுவிட்ர்சலாந்துடனான முதல் ஆட்டத்தில் 1-1 எனச் சமநிலை கண்டது. இதனால் கோஸ்டா ரிக்காவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வெற்றி நெருக்கடியுடன் களம் கண்டது. கோஸ்டா ரிக்கா கோல்காப்பாளர் கெய்லர் நவாஸ் பிரேசிலின் பல கோல் முயற்சிகளை முறியடித்தார். ஆயினும், இடைநிறுத்தத்திற்காக இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இரண்டாம் நிமிடத்தில் கொட்டின்யோவும் (வலமிருந்து 2வது) கடைசி நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மாரும் கோலடிக்க, பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்தது. படம்: ராய்ட்டர்ஸ்
கடைசி நேர கோல்களால் கரைசேர்ந்த பிரேசில்
1 mins read
-

