விமர்சனங்களுக்குப் பதிலடி

விமர்சனங்களுக்குப் பதிலடி

2 mins read
a47eb844-6242-4232-8084-6ee9afedd6a6
-

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: கோஸ்டா ரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றி யாளரான பிரேசில். எதிரணியின் கட்டுக்கோப்பான தற்காப்பால் ஆட்ட நேரம் முழு வதும் கோல்போட முடியாமல் தடு மாறிய பிரேசில், இடைநிறுத்தத் திற்கான கூடுதல் நேரத்தில் கொட்டின்யோவும் நெய்மாரும் அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களால் வெற்றிக்கனியைப் பறித்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோலடித்த நெய்மார், ஆட்டம் முடிந்ததாக நடுவர் 'விசில்' ஊதி அறிவித்ததும் திடலிலேயே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார். ஏதோ உலகக் கிண்ணத்தையே வென்றுவிட்டதுபோல அவரது அழுகை காட்டியதாக விமர்சனங் கள் எழுந்தன.

"உலகக் கிண்ணத்தின் இரண் டாவது ஆட்டத்திலேயே அழுவ தைச் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது. திடலில் மனஉறுதியை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு, எளிதில் மனம் உடைந்து போகும்படி நடந்துகொள் ளக்கூடாது. நெய்மாரின் அழுகை கவலை தருகிறது," என்று எழுதியிருந்தது பிரேசிலின் ஆகப் பெரிய நாளிதழான 'ஓ குளோபோ'. இதையடுத்து, தமது டுவிட்டர் பக்கத்தில் நெய்மார் போட்ட ஒரு பதிவு, அந்த விமர்சனத்திற்குப் பதிலடி தரும் வகையில் இருப்ப தாகக் கூறப்படுகிறது.

"இந்த இடத்திற்கு வர நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியாது. கிளிகள் கூட பேசலாம், ஆனால் அந்தத் தருணத்தில் என் உணர்வுகள் யாருக்கும் புரிந்திருக்காது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அது மகிழ்ச்சியால் வந்த அழுகை. வெல்லவேண்டும் என்ற ஆசையும் உறுதியும் நிறைவேறிய தால் அப்படி நடந்துகொண்டேன். என் வாழ்வில் எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை. எனது கனவு, அல்ல, நோக்கம் இன்னும் உயிர்ப் புடன் உள்ளது," என்றார் நெய்மார்.

பிரேசிலின் 2வது கோலை அடித்த நெய்மாரைத் தூக்கிக் கொண்டாடும் சக வீரர் டக்ளஸ் கோஸ்டா. படம்: ராய்ட்டர்ஸ்