ரோஸ்டோவ் ஆன் டான்: உலகக் கிண்ணப் போட்டியில் 'எஃப்' பிரிவில் நேற்று முன்தினம் இரவு மெக்ஸிகோ அணியுடன் நடை பெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தென் கொரியா 1-=2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அப்பிரிவில் இரு ஆட்டங் களிலும் தோல்வியைத் தழுவிய தை அடுத்து, இந்த உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட இரு ஆசிய அணிகளில் ஒன்றான தென் கொரியா, முதல் சுற்றிலிருந்து வெளியேறும் அபாய த்தில் உள்ளது. சுவீடன் அணி உடனான முதல் ஆட்டத்தில் தென் கொரியா 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
குறிப்பிடும்படியாக, ஜெர்மனி யை 1-=0 எனும் கோல் கணக்கில் தமது தொடக்க ஆட்டத்தை வென்று அசத்திய மெக்ஸிகோ, தென் கொரியாவை வென்றதன் மூலம் இப்போது அடுத்த சுற்றுக் குள் நுழையும் வாய்ப்பைப் பெற்று உள்ளது. மெக்ஸிகோ அணிக்கு எதி ரான ஆட்டத்தில், தமது அணியி ன் தற்காப்புப் பிரிவு ஆட்டம் கண்ட தாக தென்கொரிய அணி யின் பயிற்றுவிப்பாளர் ஷின் டே யோங் ஒப்புக்கொண்டுள்ளார்.

