சரன்ஸ்க்: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது ஈரான். போர்ச்சுகலை வெல்வதன் மூலம் அடுத்த சுற்றுக்கு ஈரான் தகுதி பெற முடியும். ஆனால் போர்ச்சுகல் அடுத்து சுற்றுக்குச் செல்ல இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டால் போதும். என்றாலும், 'பி' பிரிவில் முதல் இடத்தைப் பிடிக்க போர்ச்சுகல் அணி ஈரான் அணியைத் தோற்கடிக்க முற்படும். அதன் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார் அணித் தலைவர் கிறிஸ் டியானோ ரொனால்டோ.
ஸ்பெயின், மொரோக்கோ ஆகிய அணிகளுக்கு எதிராக போர்ச்சுகல் விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களில் அணிக் காக அனைத்து கோல்களையும் அடித்தவர் ரொனால்டோ. இந்நிலையில், இப்போட்டியில் இதுவரை நான்கு கோல்களை அடித்து முன்னணி ஆட்டக்காரராக இருக்கும் அவரை இன்றிரவு பின் நேரத்தில் நடைபெறவுள்ள ஆட்டத் தில் கோல் அடிக்கவிடாமல் ஈரானிய தற்காப்பு ஆட்டக்காரர்கள் தடுப்பது கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

