செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: முதல் இரு ஆட்டங்களில் சொதப்பலாக ஆடியதால் 'டி' பிரிவின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்ட அர் ஜெண்டினாவிற்கு இன்று பின்னி ரவு நடக்கவுள்ள நைஜீரியாவிற்கு எதிரான ஆட்டமே இறுதி வாய்ப்பு. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அர்ஜெண்டி னாவிற்குக் கிட்டலாம். வெற்றி மட்டுமே உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற லயனல் மெஸ்ஸியின் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்யும். இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் மெஸ்ஸி இன்னும் தமது கோல் கணக்கைத் தொடங் கவே இல்லை. போதாக்குறைக்கு, சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோட்டை விட்டு அதிர்ச்சி அளித்தார். அந்த விரக்தியில் இருந்தாலும் வெற்றிப் பசியுடன் அவர் இருப்ப தாகக் குறிப்பிட்டுள்ளார் சக வீரரான மஸ்செரானோ.
"முதல் இரு ஆட்டங்களால் எங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கி, திருப்புமுனையை ஏற்ப டுத்த வேண்டும் என்ற பேரார் வத்துடன் உள்ளார் மெஸ்ஸி," என்று அவர் சொன்னார். அத்துடன், பயிற்றுவிப்பாளர் சம்பாவ்லிக்கும் வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டுள்ளதாக வெளியான செய்தி யையும் அவர் மறுத்தார். உலகக் கிண்ணப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு முறை மோதியுள்ளன. அந்நான்கு ஆட்டங்களிலும் அர் ஜெண்டினாவே வென்றது.
ஆயினும், கடந்த நவம்பரில் நடந்த நட்புமுறை ஆட்டத்தில் 4=2 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்த நைஜீரியா, இம்முறையும் அதை நிகழ்த்திக்காட்ட முடியும் என உறுதியாக நம்புகிறது. இதற்கிடையே, தடுமாறி வரும் அர்ஜெண்டினா வீரர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் அவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புத் தரவேண் டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் முன்னாள் அர்ஜெண்டினா நட்சத் திரமான டியேகோ மரடோனா.
ரஷ்யாவின் புரோனிட்சி நகரில் நேற்று முன்தினம் மெஸ்ஸியின் உருவச் சிலை தாங்கிய பிரம்மாண்ட 'கேக்'குடன் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. படம்: ஏஎஃப்பி

