போர்ச்சுகல் வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்க முயன்ற ஈரானிய ரசிகர்கள்

போர்ச்சுகல் வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்க முயன்ற ஈரானிய ரசிகர்கள்

1 mins read

சரன்ஸ்க்: முக்கிய ஆட்டத்தில் போர்ச்சுகலும் ஈரானும் இன்று அதிகாலை மோதவிருந்தன. போர்ச்சுகலை வீழ்த்தும் பட்சத்தில் ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அதற்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய ஈரானிய ரசிகர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, போர்ச்சுகல் ஆட்டக்காரர்கள் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றியிருந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் ஊளையிட்டபடி இருந்தனர். இந்தச் சத்தத்தால் போர்ச்சுகல் வீரர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாமல் போய், களைப்பு காரணமாக மறுநாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடத் தடுமாறுவர் என்பது ஈரானிய ரசிகர்களின் எண்ணம்.

இரவு நேரத்தில் ரசிகர்களின் இடையூறு தொடர்ந்ததால் போலிசார் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனாலும், அவர்கள் சிறு சிறு கும்பல்களாகச் சேர்ந்து சத்தமெழுப்பிய படியே இருந்தனர். இது பற்றி மெஹதி ஃபாயஸ் எனும் ஈரானிய ரசிகர் கூறுகையில், "எனக்கு ரொனால்டோவையும் போர்ச்சுகலையும் பிடிக்கும். ஆனாலும் இது முக்கியமான, பெரிய ஆட்டம். அதனால் இப்படியெல்லாம் நாங்கள் செய்யவேண்டியுள்ளது," என்றார்.

மேலும் செய்திகள்