ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தலை மையிலான போலந்து அணி, தான் ஆடிய முதல் இரு ஆட்டங்களிலும் தோற்று உலகக் கிண்ணத் தொடரைவிட்டு வெளியேறியது. முதல் ஆட்டத்தில் செனகலிடம் தோற்ற அக்குழு, நேற்று கொலம் பியாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டு மெனில் இந்த ஆட்டத்தில் வென் றாகவேண்டும் என்ற நெருக்கடி யுடன் இரு அணிகளும் களம் புகுந்தன. தங்களுக்கான வாய்ப்பு வரும் எனப் பொறுமை காத்த கொலம் பியாவிற்கு 40வது நிமிடத்தில் பலன் கிட்டியது. நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகெஸ் அனுப்பிய பந்தை நேர்த்தியாகத் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார் தற்காப்பு யெரி மினா. பார்சிலோனா குழுவிற்காக விளையாடி வரும் மினா, உலகக் கிண்ணப் போட்டி களில் அடித்த முதல் கோல் இதுதான்.
அதேபோல, 70வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது கோல் கணக்கைத் தொடங்கினார் ரடமெல் ஃபல்காவ். கடந்த முறை பிரேசிலில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆறு கோல்களை அடித்து கொலம் பியாவை காலிறுதிச் சுற்று வரை கொண்டு சென்ற ரோட்ரிகெஸ், நேற்றைய ஆட்டத்தில் இன்னொரு கோல் விழவும் காரணமாக அமைந் தார். ஜப்பானுக்கு எதிரான ஆட் டத்தில் கெண்டைக்கால் காயம் காரணமாக அரை மணி நேரமே திடலில் இருந்த அவர், நேற்றைய ஆட்டத்தில் 75வது நிமிடத்தில் அனுப்பிய பந்தை வலைக்குள் உதைத்து கொலம்பியாவின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த் தினார் யுவான் குவாட்ராடோ.
கொலம்பியாவின் முதல் கோலை அடிக்கும் தற்காப்பு ஆட்டக்காரர் யெரி மினா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

