40 ஆண்டுகளில் முதல் வெற்றி

40 ஆண்டுகளில் முதல் வெற்றி

1 mins read

சோச்சி: உலகக் கிண்ணத் தொடரைவிட்டு ஏற்கெனவே வெளியேறிவிட்டபோதும் வெற்றியுடன் விடைபெற்று ஆறுதல் கண்டது பெரு. முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 18வது நிமிடத்தில் ஆண்ட்ரே கரையோவும் 50வது நிமிடத்தில் பௌலோ கரேராவும் கோலடிக்க, பெரு 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. 1978ஆம் ஆண்டிற்குப் பின் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்குக் கிட்டிய முதல் வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.