'வெற்றி வீணாகிவிடக்கூடாது'

'வெற்றி வீணாகிவிடக்கூடாது'

1 mins read

சமாரா: கடைசி நேரத்தில் விட்டுக்கொடுத்த கோலால் ஜப்பானிடம் தோற்றபோதும் அடுத்த ஆட்டத்தில் போலந்தை வீழ்த்தி மூன்று புள்ளிகளைக் கைப்பற்றியது கொலம்பியா. அந்த உத்வேகத்துடன் இன்றிரவு நடக்கவுள்ள ஆட்டத்தில் செனகலையும் வீழ்த்த கொலம்பியா வியூகம் வகுத்து வருகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றுப் போனால் உலகக் கிண்ணத் தொடரைவிட்டு அந்த அணி வெளியேற நேரிடும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், போலந்துக்கு எதிரான வெற்றி வீணாகிவிடும். அதனால், 100% கவனம் செலுத்தி வெற்றி முனைப்புடன் ஆடவேண்டும் என சக வீரர்களை வலியுறுத்தி உள்ளார் கொலம்பிய கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா.