காலிறுதியில் ரஷ்யா; சோகத்தில் மூழ்கிய ஸ்பானிய நட்சத்திரப் பட்டாளம்

காலிறுதியில் ரஷ்யா; சோகத்தில் மூழ்கிய ஸ்பானிய நட்சத்திரப் பட்டாளம்

1 mins read
b13d0b2f-68d0-4516-a51c-217f88f944e1
-

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினை அது 4=3 எனும் கோல் கணக்கில் பெனால்டி ‌ஷுட்அவட்டில் தோற் கடித்தது. நட்சத்திர வீரர்கள் பலரைக் கொண்ட ஸ்பெயின் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்து ரஷ்ய தற்காப்பு ஆட்டக்காரரின் காலில் பட்டு வலைக்குள் சென்றது. ஸ்பெயின் முன்னிலை வகித்தது. ஆனால் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ரஷ்யாவின் ஸ`பா தலையால் முட்டிய பந்து ஸ்பெயினின் ஜெரார்ட் பிகேயின் கையில் பட்டதால் ரஷ்யாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ஸ்பெயினின் இயாகோ ஆஸ்பாஸ் எடுத்த பெனால்டி கோலாகாமல் பார்த்துக்கொண்டார் ரஷ்ய கோல்காப்பாளர் இகோர் அகின்யேவ். மின்னல் வேகத்தில் வந்த பந்து அவரது காலில் பட்டு வெளியானது. அகின்யேவ்வின் இந்தச் சாகசம் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கடும் போராட்டத்துக்குப் பிறகு தோல்வியின் பிடியில் சிக்கிய ஸ்பெயின் ஆட்டக்காரர்கள் மீளாத் துயரில் வாடினர். ஸ்பெயினின் கிண்ணக் கனவு ஒரு முடிவுக்கு வந்தது. படம்: ராய்ட்டர்ஸ்