வெற்றி இலக்குடன் சௌத்கேட் வியூகம்

வெற்றி இலக்குடன் சௌத்கேட் வியூகம்

1 mins read
a3f32f65-e8aa-4e50-a886-a892c23fee0b
-

மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய ஆட்டத்தில் கொலம்பியாவை இன்றிரவு சந்திக்கிறது இங்கிலாந்து. முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டு வெற்றிகள் ஒரு தோல் வியுடன் 'ஜி' பிரிவில் இரண் டாவது இடத்தைப் பிடித்தது இங்கிலாந்து. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் அது 1=0 எனும் கோல் கணக்கில் தோற்றது. 'ஹெச்' பிரிவில் இடம்பெற்ற கொலம்பியா அதன் முதல் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. அதில் அது எதிர்பாராத விதமாக 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்ந்தது.

ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் அதிரடியாக வெற்றிகளைப் பதிவு செய்த கொலம்பியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், கொலம் பியாவை முறியடித்து காலிறுதிக்குத் தகுதி பெற இங்கிலாந்தின் நிர்வாகியும் முன்னாள் நட்சத்திர வீரருமான கேரத் சௌத்கேட் (படம்) வியூகம் வகுத்து வருகிறார். நேற்று முன்தினம் நடை பெற்ற பயிற்சியில் 3-3, 2-2 எனும் வியூகத்தைக் கையாண்டு தமது வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார் சௌத்கேட். இந்த வியூகம் தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கோல் வேட்டையில் இறங்கும் அதே சமயத்தில் தற்காப்பு அரணையும் பலப்படுத்திக்கொள்ளும் என்று தெரிகிறது.