ஷரபோவா, குவிட்டோவா அதிர்ச்சி தோல்வி

ஷரபோவா, குவிட்டோவா அதிர்ச்சி தோல்வி

1 mins read
8fc956c0-798a-4da4-9de8-e7b8aec36190
-

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முன்னாள் வெற்றியா ளர்களான மரியா ஷரபோவாவும் பெட்ரா குவிட்டோவாவும் இந்த முறை முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று பிரதான சுற்றுக்குள் நுழைந்த சக ரஷ்ய வீராங்கனை விட்டாலியா டயட்சென்கோவிடம் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார் ஷரபோவா. செக் குடியரசைச் சேர்ந்தவரான குவிட்டோவா, பெலருசின் அலியக்சாண்ட்ரா சஸ்னோவிச்சிடம் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வினார்.