இன்னும் திருப்தி அடையவில்லை - யான்ன ஆண்டர்சன்

இன்னும் திருப்தி அடையவில்லை - யான்ன ஆண்டர்சன்

1 mins read
bdc37bd4-ea48-4b98-b8a6-5053b6835bcf
-

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி தான், ஆயினும் தாங்கள் இன்னும் மனநிறைவு அடையவில்லை என் கிறார் சுவீடன் பயிற்றுவிப்பாளர் யான்ன ஆண்டர்சன். சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தின் 66வது நிமிடத்தில் சுவீ டனின் எமில் ஃபோர்ஸ்பர்க் உதைத்த பந்து, எதிரணி வீரரின் காலில் பட்டு திசை மாறி வலைக் குள் புகுந்தது. ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலும் இதுதான் என்பதால் சுவீடன் 1-0 என்ற கணக்கில் வென்று, 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறை யாகக் காலிறுதிச் சுற்றில் அடி எடுத்து வைத்துள்ளது. நாளை மறுநாள் இரவு நடக்க உள்ள காலிறுதியில் அந்த அணி இங்கிலாந்துடன் பொருதுகிறது. இந்நிலையில், "திடலிலும் சரி, வெளியிலும் சரி. ஒருவரின் பணியை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வது என்ற அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறோம். அதற்குப் பலன் கிட்டி வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது," என ஆண்டர்சன் தெரிவித்தார்.

சுவிட்ர்சலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலை அடித்து தமது அணியை காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்த மகிழ்ச்சியில் சுவீடன் ஆட்டக்காரர் எமில் ஃபோர்ஸ்பர்க் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்